குன்னூர் அருகே வெலிங்டன் பகுதியில் மெயின் ரோட்டில் தடுப்புச்சுவர் இல்லை. பஸ் நிறுத்த பகுதியில் நிழற்குடை கிடையாது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே விரைவாக நடவடிக்கை எடுத்து, மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும்.