சேலம் மாவட்டம் மேட்டூர் அணை வட்டம் ராமன் நகர் பூங்கா எதிரில் பொதுப்பணித்துறை கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் இந்த கட்டிடம் முழுவதும் விரிசல் விழுந்து ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கிறது. இதன் அருகே ரேஷன் கடை உள்ளது. இதனால் அங்கு பொதுமக்கள் அச்சத்துடனே வந்து செல்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் ஆபத்தான கட்டிடத்தை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.