ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2026-01-11 10:43 GMT

ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் தெருவிளக்குகள் சரிவர ஒளிருவது இல்லை. இதனால் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இரவு நேரங்களில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சப்படுகிறார்கள். மேலும் அங்குள்ள சாலையும் மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இரவில் விபத்துகள் அதிகரித்து வருகிறது. எனவே நகராட்சி அதிகாரிகள் அந்த சாலையை சீரமைக்கவும், தெருவிளக்குகளை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்