திட்டக்குடி பஸ் நிலையத்தில் கழிப்பறை கட்டிடம் இல்லாததால் இங்கு வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் சற்று தொலைவில் உள்ள மாா்க்கெட் கழிப்பறைக்கு சென்று வர வேண்டியுள்ளது. இதனால் காலவிரையமாவதால் பஸ் நிலையம் வரும் பயணிகள் கடும் அவதியடைகின்றனர். இதை தவிர்க்க பஸ் நிலையத்திலேயே ஒரு கழிப்பறை கட்டிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.