மேடு, பள்ளமான நடைபாதை

Update: 2024-11-17 11:56 GMT

கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இருந்து ராம்சந்த் சதுக்கம் செல்லும் சாலையோரத்தில் பொதுமக்கள் நடந்து செல்ல நடைபாதை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நடைபாதைக்கு அடியில் குடிநீர் குழாய்கள் பதிக்க வேண்டி இருந்தது. இதனால் நடைபாதையில் குழி தோண்டப்பட்டது. குழாய்களை பதித்த பிறகு நடைபாதையை முறையாக சீரமைக்கவில்லை. இதனால் அதில் பதிக்கப்பட்டு உள்ள கற்கள் சீராக இல்லாமல் மேடு, பள்ளமாக இருக்கிறது. இதன் காரணமாக அதில் நடந்து செல்லும் பொதுமக்கள் தவறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே அந்த நடைபாதையை முறையாக சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.  

மேலும் செய்திகள்