பயனற்ற நீர்பாசன அலுவலக கட்டிடம்

Update: 2024-11-10 14:02 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பொதுப்பணித்துறை நீர் பாசன அலுவலக கட்டிடம் பயன்பாடின்றி சிதிலமடைந்து கிடக்கிறது. அங்கு பணியாற்றிய அலுவலர்கள் கட்டிடம் இன்றி தவித்து வருகின்றனர். மழை காலத்தில் பாசன குளங்களின் பராமரிப்புக்கு விவசாயிகள் உரிய அலுவலர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே பொதுப்பணித்துறை நீர்ப்பாசன அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்