சேறும், சகதியுமான சாலை

Update: 2024-09-29 06:43 GMT

கூடலூர் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் செம்பாலா பகுதியில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இங்கு ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிழற்குடை முன்பு தண்ணீர் தேங்கி சேறும், சகதியும் காணப்படுகிறது. இதனால் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் தண்ணீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்