கோத்தகிரி காந்தி மைதானத்தில் தினமும் ஏராளமான வீரர்கள் விளையாட்டு பயிற்சி பெற்று வருகிறார்கள். இதை ஒட்டி நேரு பூங்கா உள்ளது. மைதானத்துக்கும், பூங்காவுக்கும் இடையில் பாதுகாப்புக்காக கம்பிவேலி அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கம்பிவேலி சரிந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உலா வரும் நிலை உள்ளது. மேலும் பூங்காவுக்கும், மைதானத்துக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. எனவே அந்த கம்பிவேலியை முறையாக அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.