கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு பின்புறம் ஏராளமான மக்கள் குடியிருந்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்புகளுக்கு செல்லும் சாலையோரத்தில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. இதனால் அங்கு பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் நடமாட்டம் காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே அந்த புதர் செடிகளை உடனடியாக வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.