தியாகதுருகம் அருகே சிறுநாகலூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தில் தற்காலிகமாக ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. அங்கு போதிய இடவசதி இல்லாததால் ரேஷன் பொருட்களை இருப்பு வைக்க முடியாத சூழல் உள்ளது. இதை தவிர்க்க அங்கு புதிதாக ரேஷன் கடை கட்டிடம் கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.