புதுக்கோட்டை மாவட்டம் பழையஆதனக்கோட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு தினந்தோறும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், நோயாளிகள் பஸ் மூலம் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் அவர்களின் வசதிக்காக சுகாதார நிலையத்தின் அருகே பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த நிழற்குடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்பட்டது. இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அந்த சிதிலமடைந்த பயணிகள் நிழற்குடை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்ட நிலையில் அந்த இடத்தில் மீண்டும் புதிய பயணிகள் நிழற்குடை கட்டப்படாமல் உள்ளது. இதனால் பயணிகள் மற்றும் நோயாளிகள் பஸ் ஏறி தங்கள் ஊருக்கு செல்ல பஸ் வரும் வரை மழை மற்றும் வெயிலில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.