கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் இருந்து கோவில்மேடு செல்லும் செங்குத்தான சாலையின் நடுவே குடிநீர் குழாய்கள் பதிக்க பொக்லைன் எந்திரம் மூலம் அகலமாக குழி தோண்டப்படுகிறது. ஏற்கனவே அந்த சாலை குறுகலான சாலைதான். மேலும் நீண்ட நாட்களாக சீரமைக்கப்படாமல் கிடக்கிறது. இதனால் அந்த வழியே வாகனங்கள் சென்று வருவதில் கடும் சிரமம் ஏற்படுகிறது. எனவே பொக்லைன் எந்திரத்திற்கு பதில் மினி பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தி சிறிய அளவிலான குழியை தோண்ட பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.