கள்ளக்குறிச்சி அருகே நிறைமதி கிராமத்தில் குரங்குகள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து காணப்படுகிறது. இவை திறந்திருக்கும் வீடுகள், கடைகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடிச் செல்கிறது. மேலும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை கடிக்கப் பாய்கின்றன. எனவே குரங்குகளை பிடித்து காப்புக்காட்டில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.