புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலூகா, கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சுவற்றில் விரிசல் ஏற்பட்டு சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.