தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சுற்றுச்சுவர் மிகவும் சேதமடைந்த நிலையில் இப்ப விழுமோ? எப்ப விழுமோ? என்கிற நிலையில் உள்ளது. இதனால் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் சேதமடைந்த சுற்றுச்சுவரை இடித்துவிட்டு புதிய சுற்றுச்சுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?