தியாகதுருகத்தில் இருந்து சிறுநாகலூர் செல்லும் சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள முட்செடிகளின் கிளைகள் சாலையை மறைத்தபடி செல்கிறது. மேலும் சாலையோரம் பள்ளங்களும் உள்ளன. இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே முட்செடிகளை அகற்றுவதோடு, சாலையோர பள்ளத்தையும் சரி செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.