தியாகதுருகம் அருகே கூத்தக்குடி கிராமத்தில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவைகள் வீடுகள், கடைகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை சூறையாடி செல்வதோடு சாலையில் செல்லும் பொதுமக்களை கடிப்பதற்காக விரட்டுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?