தியாகதுருகம் அருகே கூத்தக்குடியில் உள்ள ரேஷன் கடை கட்டிடத்தில் தற்காலிகமாக கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் மேற்கூரைகள் சேதமடைந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அலுவலகத்திற்கு அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு சான்றிதழ் வேண்டி வரும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர். இதை தவிர்க்க சேதமடைந்த கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.