புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் 800 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பின்றி பாழடைந்து காணப்படுகிறது. கோவில் உள்ள ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து உட்புற கோவில்களும் சிதிலமடைந்து உள்ளன. கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய பக்தர்கள் முயன்ற போதும் பணிகள் நடைபெறவில்லை. இதனால் பிரதோஷம் உள்ளிட்ட விசேஷ நாட்களுக்கு கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வேதனைபடுகின்றனர். பாரம்பரியம் மற்றும் பழமை மிக்க இந்த கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.