கழிவறை வசதி

Update: 2024-06-02 17:47 GMT

மேட்டூர் பஸ் நிலையத்தில் புதியதாக கட்டிடம் கட்டும்பணி நடைபெற்று வருகிறது. மாற்று ஏற்பாடாக இந்த பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் கழிவறை வசதி இல்லை. பயணிகள் திறந்த வௌியை பயன்படுத்துவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இங்கு தற்காலிக கழிவறை அமைத்து தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்