கோத்தகிரி ஆதிதிராவிடர் மாணவர்கள் தங்கும் விடுதிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சூரிய சக்தியால் இயங்கும் சமையல் உபகரணங்கள் பல லட்சம் ரூபாய் செலவில் தமிழக அரசால் வழங்கப்பட்டன. ஆனால் இதுவரை அந்த உபகரணங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் மக்கள் வரிப்பணம் வீணாகி உள்ளது. எனவே அந்த உபகரணங்களை தேவைப்படும் விடுதிகளுக்கு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.