மயானத்தை சீரமைக்க கோரிக்கை

Update: 2024-05-26 11:58 GMT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுக்கா, தெண்ணம்பாடி கிராம ஊராட்சி சங்கம்பட்டி தென்னம்பாடி செல்லும் சாலையில்பொது மயானம் அமைந்துள்ளத. தற்போது மயானம் உரிய பராமரிப்பு ஏதுமின்றி சீமைகருவேல மரங்கள் அடர்ந்து புதர் மண்டி காட்சியளிக்கிறது. இதனால் இங்கு விஷ ஜந்துக்கள் அதிகம் சுற்று திரிகிறத. இதனால் இறுதி ஊர்வலம் மயானம் செல்வது மிகுந்த சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாயானத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்