புகார் பெட்டி செய்தி எதிரொலி

Update: 2024-04-14 17:00 GMT
தியாகதுருகம் அருகே நாகலூர் ஊராட்சி காலனி பஸ் நிறுத்தத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை பலத்த சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் காணப்பட்டது. இதனால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உருவானது, இது குறித்த செய்தி படத்துடன் புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சேதமடைந்து காணப்பட்ட பயணிகள் நிழற்குடை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தினத்தந்திக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்