தியாகதுருகம் அருகே நாகலூர் ஊராட்சி காலனி பஸ் நிறுத்தம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் இந்த பயணிகள் நிழற்குடை தற்போது பலத்த சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் அதனை அகற்றிவிட்டு அங்கு புதிய பயணிகள் நிழற்குடை கட்ட வேண்டியது அவசியம்.