கல்வராயன்மலையில் உள்ள கொடும்துறையில் அமைக்கப்பட்டுள்ள நூலகம் தினந்தோறும் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் நூலகம் இருந்தும் கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதை பயன்படுத்த முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் இருக்கிறார்கள். அறிவை வளர்க்க பயன்படும் புத்தகங்கள் யாருக்கும் பயனின்றி பூட்டிய அறைக்குள் தூங்குகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி நூலகத்தை தினந்தோறும் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.