புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, நகரப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட நகரப்பட்டியிலிருந்து வடக்கிப்பட்டி, வடகாடு செல்லும் சாலை மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார்சாலை அமைத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.