கோத்தகிரி தாசில்தார் அலுவலகம் மற்றும் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் இருந்து பஸ் நிலையம் செல்லும் 2 சரிவான சாலைகளில் ஏராளமான வாகனங்கள் அதிவேகத்தில் இயக்கப்படுகின்றன. இதனால் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே விபத்துகளை தடுக்க தாசில்தார் அலுவலக முன்புறமும், போக்குவரத்து போலீஸ் நிலையம் அருகிலும் 2 வேகத்தடைகள் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.