கோத்தகிரி அருகே உள்ள இடுக்கொரை ஹட்டியில் இருந்து காலனிக்கு செல்லும் நடைபாதை பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அது தற்போது பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளதால், அங்குள்ள நூற்றுக்கணக்கான குடியிருப்புகளுக்கு செல்லும் பொதுமக்கள் சிரமத்துடன் சென்று வர வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தவறி விழுந்து காயம் அடைந்து வருகிறார்கள். எனவே பழுதடைந்த நடைபாதையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.