தியாகதுருகம் அருகே கண்டாச்சிமங்கலம் கிராமத்தில் பிள்ளையார் கோவில் அருகில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்ட திறந்தவெளி கிணறு அமைந்துள்ளது. குடியிருப்பு பகுதியில் இந்த கிணறு உள்ளதால் குழந்தைகள் தவறி கிணற்றுக்குள் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் குழந்தைகள் பெரும் அச்சத்தில் உள்ளனர். எனவே குடியிருப்பு பகுதியில் உள்ள அந்த கிணற்றை உடனே மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.