புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே புதுக்கோட்டை -ஆலங்குடி சாலையில் இலுப்பை தோப்பு என்னும் இடத்தில் விவசாய பயன்பாட்டிற்காக உலர் களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த களமானது பராமரிப்பு இன்றி புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் இந்த களத்தை விவசாயிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.