மரக்காணம் தாலுகா கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீர் தெருவில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் சுகாதார பணிகள் மேற்கொள்வதோடு, வடிகால் அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.