கல்வராயன்மலை பகுதியில் குரங்குகள் தொல்லை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இவை திறந்திருக்கும் வீடுகள், கடைகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடிச்செல்வதோடு, விரட்ட வரும் பொதுமக்களையும் கடிக்க பாய்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து காப்புக்காட்டில் விட வேண்டும்.