புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வேளாண்மை அலுவலத்தில் வழங்கப்பட்ட சம்பா விதை நெல் கள் முளைப்பு திறன் இன்றி தரமற்ற நிலையில் உள்ளது. இந்த விதை நெல்லை வாங்கி சென்று விதைத்த விவசாயிகள் பயிர்கள் முளைக்காத தால் நஷ்டம் அடைந்து உள்ளனர். எனவே அரசு வேளாண்மை மையங்களில் வழங்கப்படும் விதை நெல் களைகளை நன்கு பரிசோதித்து தரமாக வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.