கச்சிராயப்பாளையத்தில் இருந்து தாவடிப்பட்டு செல்லும் வழியில் மட்டப்பாறை ஆறு செல்கிறது. இந்த ஆற்றை கடந்து செல்ல அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலம் பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே தரைப்பாலத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு, புதிதாக கட்டித்தர வேண்டும்.