புதுக்கோட்டை ஒன்றியம், வளவம்பட்டி ஊராட்சி ஆதிதிராவிடர் காலனியில் பெண்களின் நலன் கருதி மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த சுகாதார வளாகம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்துள்ளதுடன், கதவு, ஜன்னல்கள் இல்லாமல் உள்ளதால், இதனை பயன்படுத்த முடியாமல் பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.