கோத்தகிரி டானிங்டன் பகுதியில் இருந்து கொணவக்கரை பிரிவு சந்திப்பில் உள்ள சாலையோரத்தில் கட்டிட கழிவுகள் அதிகளவில் கொட்டப்படுகின்றன. இதன் காரணமாக அந்த சாலை அகலம் குறைந்து காணப்படுகிறது. இதனால் அங்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் கட்டிட கழிவுகளின் மீது வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த கட்டிட கழிவுகளை அகற்றவும், மீண்டும் கொட்டாமல் தடுக்கவும் அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.