கோட்டைப்பட்டினம் ஊராட்சி புதுக்கோட்டை மாவட்டத்திலேயே பெரிய ஊராட்சியாகும். இங்கு சுமார் 20 ஆயிரம் மக்கள் வாழ்கின்றனர். இந்த ஊரில் உள்ளவர்கள் ஆதார் அட்டை எடுக்க வேண்டும் என்றால் அருகே உள்ள மணல்மேல்குடிக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, கோட்டைப்பட்டினத்தில் நிரந்தர ஆதார் சேவை மையம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.