புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பெரிய கடை வீதியில் உள்ள வாடகை கட்டிடத்தில் நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்திற்கு தினமும் ஏராளமான மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வந்து புத்தகங்களை படித்து தங்களின் அறிவை வளர்த்து வருகின்றன. இந்நிலையில் வாசகர்களின் கோரிக்கையை ஏற்று கச்சேரி வீதியில் புதிதாக நூலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த நூலக கட்டிடம் கட்டப்பட்டு ஓராண்டு ஆகியும் இன்னும் திறக்கப்படாமல் வாடனை கட்டிடத்திலேயே இயங்கி வருகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.