ஆபத்தான கட்டிடம்

Update: 2023-11-26 11:54 GMT

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மன்னர் காலத்து கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் தற்போது மிகவும் சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் நடமாட்டத்தின்போது இந்த கட்டிடம் இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்