சின்னசேலம்-சேலம் மெயின்ரோட்டில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி வருவதால், பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.