திருக்கோவிலூர் அருகே சந்தப்பேட்டையில் உள்ள தெருமின்விளக்குகள் கடந்த 2 மாதங்களாக எரியாமல் இருந்தது. இதனால் அப்பகுதியில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உருவானது. இதுகுறித்த செய்தி தினத்தந்தி புகார்பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் மின்விளக்கை சீரமைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் தினத்தந்திக்கு நன்றி தெரிவித்தனர்.