தியாகதுருகம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சேதமடைந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. இந்த நிலையில் திறந்தநிலையில் உள்ள கட்டிடத்தில் ஆபத்தான முறையில் மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதனால் மாணவிகள் ஒருவித அச்சத்துடன் கல்வி பயிலும் நிலை உள்ளது. எனவே பாதுகாப்பான கட்டிடத்தில் மாணவிகளுக்கு பாடம் கற்பிக்கவும், கட்டிட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.