புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா நெடுவாசல் பகுதியில் சாலையோரங்களில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைபெய்யும்போது சாலையின் ஓரத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையோரம் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் இதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.