புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை தாலுகா, அண்டணூர் ஊராட்சிக்கு உட்பட்ட மஞ்சம்பட்டி கிராமத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தானியகிடங்கு கட்டுமான பணி தொடங்கியது. ஆனால் இந்த பணி முடிவடையாமல் பாதியில் நிற்கிறது. இதனால் இந்த கட்டிடத்தில் குற்ற செயல்கள் நடந்து வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.