திருக்கோவிலூர் அடுத்த தேவரடியார்குப்பம் கிராமத்தில் கொசுத்தொல்லை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் கொசு கடிப்பதால் டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா போன்ற நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் கொசுமருந்து அடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடிவடிக்கை எடுக்க வேண்டும்.