குளம் தூர்வாரப்படுமா?

Update: 2023-10-01 17:13 GMT
வானூர் அருகே செங்கமேடு கிராமத்தில் உள்ள குளம் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் குளத்தில் போதுமான அளவு தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் குறையும் நிலை உள்ளது. மேலும் இதன் காரணமாக அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உருவாகி உள்ளது. எனவே குளத்தை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்