திருக்கோவிலூர்-திருவெண்ணெய்நல்லூர் செல்லும் சாலையில் அத்தண்டமருதூர் மற்றும் பிடாரம்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதிகளில் இறந்தவர்களின் உடல்களை தென்பெண்ணையாற்றின் ஓரத்தில் உள்ள மயானப்பகுதிக்கு எடுத்துச்சென்று அப்பகுதி மக்கள் இறுதிச்சடங்கு செய்து வருகின்றனர். ஆனால் மயானத்திற்கு செல்ல பாதை வசதி இ்ல்லாததால், இறந்தவர்களின் உடலை வயல்வெளிகளில் தூக்கிச்செல்லும் அவல நிலை உள்ளதால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மயானத்திற்கு செல்ல உடனடியாக பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாகும்.