சின்னசேலம் பகுதியில் பால் குளிரூட்டும் நிலையம் அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுவதால், சாலையோரத்தில் வாகனங்கள் இறங்கும் போது விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளத்தில் மண்கொட்டி சமப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.