கோத்தகிரி காம்பாய் கடையில் இருந்து கடைவீதி, டோபிகானா வழியாக செல்லும் நீரோடை முழுவதும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளது. இதனால் நீரோடையே தெரியாத அளவிற்கு மாறிவிட்டது. மேலும் நீரோடை சுருங்கி நீரோட்டம் தடைப்பட்டு தண்ணீரை சேமிக்க முடியாத நிலை காணப்படுகிறது. எனவே நீரோடை முழுவதும் அடர்ந்து வளர்ந்துள்ள புதர்ச்செடிகளை வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.