கோத்தகிரி தாசில்தார் அலுவலக வளாகமானது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறி வருகிறது. அங்கு அலுவலகத்துக்கு வராமல், பிற இடங்களுக்கு செல்வோரும் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அலுவலகத்துக்கு வாகனங்களில் வரும் அதிகாரிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் அலுவலக வளாகத்தில் போதிய இடவசதி இன்றி காணப்படுகிறது. எனவே தாசில்தார் அலுவலக வளாகத்தில் தேவையின்றி வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.